மதுரை பெட்கிராட் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் பொங்கல் தின விழா கொண்டாட்டம் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோர் முன்னிலையிலும் உற்சாகமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதில் பெட்கிராட் அலுவலர்கள் இந்திரா,ஜெயலட்சுமி நர்மதா,மீனாட்சி, விடுதி காப்பாளர் மீனாட்சி பயிற்சியாளர்கள் சுசீலா, முத்துச்செல்வி, கீர்த்திராஜ், ஷீபா, சரஸ்வதி உள்பட 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.