போதை மற்றும் விபத்துக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நட்சத்திர நண்பர்கள் அமைப்பு மற்றும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நடத்தும் போதை மற்றும் விபத்து ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
இதனை மதுரை மாநகர் காவல்துறையின் வடக்கு துணை ஆணையாளர் அனிதா தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். கலால் துறை உதவி ஆணையர் ராஜகுரு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் நிறுவன தலைவர். ஸ்டார்குரு கலந்து கொண்டார். அமெரிக்கன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தியாகிராஜர் கல்லூரி, அப்போலோ நர்சிங் கல்லூரி உட்பட ஏராளமான கல்லூரிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி தமிழன்னை சிலை வரை இந்த விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது. போதை மற்றும் விபத்து ஒழிப்பு பதாகைகள், பேனர்களை கையில் பிடித்தபடி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் இறுதியில் அனைவரும் போதை மற்றும் விபத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டார்கள்.
இதில் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர். சேதுமணிமாதவன், தல்லாகுளம் காவல் ஆய்வாளர். தாமரைவிஷ்ணு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர். ராஜ்குமார், வக்கீல். முத்துக்குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.