நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூரில் உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரி வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் நாட்டுப்புற கலைஞர்களின் தாரை தப்பட்டையுடன் கிராமிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது, மேலும் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டும் விழாவினை அழகுபடுத்தியது.
நிகழ்ச்சியின் நிறைவில், கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியின் தாளாளர் திருமலர் ராணி நன்றி கூறி விழா நிறைவுற்றது.