JCI மயிலாடுதுறை டெல்டா சார்பில் தேசிய இளைஞர் தினம் ( விவேகானந்தர் பிறந்த தினம்) கொண்டாடப்பட்டது.
திருவிழந்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் படத்திற்கு JCI மயிலாடுதுறை டெல்டா தலைவர்Jc R.K. அரவிந்தகுமார் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை வட்டாட்சியர் சுந்தர் கலந்து கொண்டு டெல்லியில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்ற சஞ்சய் ராம் அவர்களுக்கு விவேகானந்தர் விருது வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை Jc ஶ்ரீதர், முன்னாள் தலைவர் Jc மனோஜ் கார்த்திக் செய்திருந்தனர்.
முடிவில் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.