மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஸ்டார் குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் முதியோர்களுக்கு அன்னதானம், புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வழக்கறிஞர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் சினி.வினோத் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் காலையிலிருந்து மாலை வரை நடந்த சிலம்பாட்டம், ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை முதியோர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.