அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை மாநகர் 71-வது வார்டு பழங்காநத்தம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம், 71 வது வட்டக் கழகச் செயலாளர் பழங்காநத்தம் கே.ராஜாராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் கருப்பசாமி கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது பற்றியும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராகவும்,மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் 71-வது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.