அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பாக, விரைவில் நடைபெற உள்ள மருதுபாண்டியர்கள் விழா, தேவர் ஜெயந்தி விழா, மற்றும் கழகத்தின் 25-ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்,கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மதுரை மாட்டுத்தாவணி அருகே லேக் ஏரியாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வி டி பாண்டியன் தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பகவதி முன்னிலையில், மாநில பொருளாளர் மணிவேல், மாநில தலைமைக் கழக செயலாளர் வேலுச்சாமி, மாநில இணை பொதுச்செயலாளர் பிரபு, மாநில இளைஞரணி செயலாளர் பெரியதுரை, மாநிலத் துணைத் தலைவர் தமிழரசன்,மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகபாண்டி, மதுரை மண்டல செயலாளர் எஸ் எம் நாகராஜ் தேவர் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், வைகை பத்மநாபன், முத்துராமலிங்கம், வழக்கறிஞர்கள் மணிகண்டன்,ஷோபனா ராஜன்,சாலை பிரபாகரன், எஸ் ஆர் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.