மதுரை, அக் 04-
மீனவர்கள் மீதான அடக்குமுறையைக்கண்டித்து பா.ம.க.சார்பில் வரும் 8 – ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் கே.சி.திருமாறன் ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து பா.மக. சார்பில் வருகிற 8-ந்தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்கி வருவதாலும், அவர்களுடை உடைமைகளை அதாவது வலைகளை சேதப்படுத்துவது, கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.