விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் நாகை வடக்கு மாவட்ட அமைப்பாளராக சே.மகாதேவன் நியமனம்…
நாகை மாவட்டம் நாகூர் பண்டகசாலை தெருவைச் சேர்ந்தவர் சே.மகாதேவன் இவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளராக கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். தொல்.திருமாவளவன் நியமனம் செய்து கட்சி அலுவலகத்தில் சான்றிதழை வழங்கினார்.
அவருடன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் குடந்தை தமிழினி, நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.