மதுரை கரும்பாலை பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை கரும்பாலை எஸ்.எம்.நகரில் புதிய பொது கழிப்பிட பணி நடந்து வருகிறது. இப்பணியினை 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் பார்வையிட்டு விரைந்து முடிக்க கூறினார்.
அதன் பின் கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் கூறுகையில், இப்பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வசதி ஏற்படுத்தி கொடுத்த மாநகராட்சி மேயர், ஆணையர், துணை மேயர், மண்டல தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப்பகுதி பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை சமுதாயக் கூடம். இப்பகுதியில் நடுத்தர, ஏழை மக்கள் அதிகமாக வசித்து வருவதால் தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கு தனியார் திருமண மண்டபங்களில் புக்செய்ய அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆகவே இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க
புதிய சமுதாயக்கூடம் ஏற்படுத்திக் கொடுத்தால், அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை மேயருக்கு கோரிக்கையாக வைக்கிறேன் என்று கூறினார்.