மயிலாடுதுறை மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளை சார்பில், தீபாவளி திருநாளை முன்னிட்டு, ஆதரவற்றோருக்கு உணவு,உடை, இனிப்புகள் வழங்கப்பட்டது.
மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் தஞ்சை மகாதேவன் கூறுகையில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தான் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், மூன்றாண்டுக்கு முன்பு மயிலை கருணைக்கரங்கள் என்ற பெயரில் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு நண்பர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து, மருத்துவ உதவி செய்து காப்பகத்தில் சேர்த்து வருவதுடன், ஆதரவற்று இறந்தவர்கள் 64 நபர்களை நல்லடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி திருநாளை முன்னிட்டு, சாலையோரம் உள்ள ஆதரவற்றோருக்கு மயிலாடுதுறை,காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் இனிப்புகள், புத்தாடை, போர்வை மற்றும் உணவுகள் தன் துணைவியாருடன் சேர்ந்து வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.