மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை மல்லிகை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் மதுரை அரசரடி அருகே உள்ள மதி தியேட்டர் வளாகத்தில், மகளிரணி மண்டல அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முகாமை மதுரை மண்டல செயலாளர் அழகர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மய்யப்பெண் கலையரசி, வட அமெரிக்கா கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகள் பத்மாவதி, சுகன்யா ரிச்சர்ட் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இம்முகாமில் 40 வயதை கடந்த பெண்களுக்கு மெமோகிராம், பாப்ஸ்மியர், அல்ட்ரா சவுண்ட், எக்கோ மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இ.சி.ஜி, இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, காது,மூக்கு, தொண்டை மருத்துவம், பல் சிகிச்சைகள் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உமையாள், மணிமேகலை,நிரோஷ்பானு, ஜோதிமணி, சுகுணா, லீலாவதி, உமாராணி, சிவகாமி,மீனா மற்றும் ம.நீ.மய்யம் நிர்வாகிகள் ஆசைத்தம்பி, நம்மவர் செந்தில், ராஜ்கமல், வி.பி.மணி, அவனி சிவா, சாம், சாரதி, மயில்ராஜ், பரணி, பி.எஸ்.சரவணன், ஜெயபால், மாரிமுத்து, ரமேஷ், முருகன்,மாரியப்பன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.