மதுரை எல்லீஸ் நகரில் வைகை டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை,மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர்களான ஜோசப் சகாயம், சுரேஷ் மரியசெல்வம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை பிரதிநிதி ஜோ ஜார்ஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன், வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை வைகை டிரஸ்ட் விஸ்வ யுவகேந்திரா (நியூடெல்லி) ஆகியவை ஒருங்கிணைப்பு செய்தன. வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் விஸ்வ யுவகேந்திரா நிறுவனத் தலைவர் ரஜத் தாமஸ் ஆகியோர் துவக்க உரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நாராயணன், வழக்கறிஞர் அழகேசன், எஃப் ஏ ஐ மேலாளர் டாக்டர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோலை எஸ் பரமன் நன்றியுரை கூறினார்.
கலாம் டிவி செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்