.தீபாவளியை முன்னிட்டு, ROYAL SOU CO சௌராஷ்ட்ரா கல்லூரியில் 1974-78 ஆம் வருடத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக, மதுரை சக்கிமங்கலத்தில் ராயல் விஷன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ,மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பி.ஆர்.முரளிகிருஷ்ணன்,கே.என்.கே.ரகுநாத், ஜே.கே.ரமேஷ்,ஆர்.கே.விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர்.எஸ்.ஆர்.சதாசிவன், ஆர்.ஆர்.சாந்தமூர்த்தி, பிரதீப்குமார்,ஏ.கே.ஜெய்குமார், டி.ஏ.கோபிநாத் மற்றும் கே.எஸ்.சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ROYAL SOUCO ஸ்தாபகர் முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி வரவேற்புரையாற்றினார்
. சிறப்பு அழைப்பாளர்களாக கே.ஆர்.எம்.கிஷோர் குமார் IPS , ராஜ்குமார் IFS, என்.கே.ராகவன், டாக்டர் டி.என்.குப்புசாமி, டாக்டர் கண்ணன், டாக்டர் முரளிதரன்,வழக்கறிஞர் பிரசாந்த், கே பிரகாஷ், சக்கிமங்கலம் சபா தலைவர் எஸ்.ஆர்.கண்ணன், ஜி.கே.ராகவன்,சசிகுமார் , ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லயன் டி.ஆர்.ரவீந்திரநாத்,லயன்.ஜி.ஆர்.சிவகுமார், ஆடிட்டர் விஸ்வநாதன், ஆடிட்டர் சந்திரசேகரன்,டி.எஸ்.சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியின் முடிவில் சக்கிமங்கலம் சபா தலைவர் கண்ணன் நன்றியுரை கூறினார்.