முன்னாள் கூடுதல் கருவூல அதிகாரி டி ஆர் ரவீந்திரனின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு,தெற்கு வாசல் சிக்னல் அருகே உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் சாய் அறக்கட்டளை இணைந்து நடத்தும் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்,தந்தையர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
சௌராஷ்ட்ரா மூத்த குடிமக்கள் மன்ற செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஆர் கே பாலயோகி, தமிழ்நாடு கருவூல கணக்கு துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் தனசேகரன், மதுரை மெட்ரோ அரிமா சங்கத் தலைவர் திருவேங்கடமூர்த்தி, அரிமா சங்கம் ராஜகோபால் உள்பட முக்கிய பிரமுகர்கள் டி ஆர் ரவீந்திரன் அவர்களின் சேவை குறித்து, பாராட்டி பேசினர்.
மேலும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற டி வி எஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை ஏ எல் துர்கா ஆகியோருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.