மதுரையில் யூனியன் பாங்க் 106-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, யூனியன் வங்கி மண்டல தலைமை மேலாளர் அபிஜித் தலைமையில் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் டாக்டர் மோனிகா ராணா ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு 106 இலவச தையல் மிஷின்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், தையல் மிஷின்களை வாங்கிக்கொண்டு செல்வதோடு நின்று விடாமல் அனைவரும் நீங்கள் அனைவரும் தொழில் முனைவோராக சாதனை படைக்க வேண்டும் என பேசினார்.
யூனியன் வங்கி மண்டல தலைமை மேலாளர் அபிஜித் பேசுகையில் யூனியன் பாங்க் இந்தியா மகாத்மா காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு 106 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் வழிகாட்டுதலின் பேரில் 106 ஏழை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற தையல் மிஷின் வழங்குகிறோம் என பேசினார்.
இந்நிகழ்வில் வங்கி அலுவலர்கள் செல்வராணி, சம்பத்குமார், சார்லஸ், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள்ரூபி, கௌரவ ஆலோசகர் மும்பை கண்ணன் மற்றும் ஸ்ரீ சக்கரா இயக்குனர் ரிஷிகேஷ், ஒருங்கிணைப்பாளர் இந்திரா, அலுவலர்கள் நர்மதா, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.