மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் சமூகசேவகர் மக்கள் தொண்டன் அசோக்குமார். இவர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தின் போது இவர் செய்த பல்வேறு சமூக சேவைகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் விரைவில் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பனை மரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பனை விதையில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை பரிசு பொருளாக வழங்க தயார் செய்துள்ளார்.
இது குறித்து மக்கள் தொண்டன் அசோக்குமார் நம்மிடம் கூறுகையில் :-
2024 இந்த ஆண்டிற்கான கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் காக்க பனை விதையில் கிறிஸ்மஸ் தாத்தா தயார் செய்துள்ளேன்.இதன் மூலம் பொது மக்கள் கவனத்தினை ஈர்த்து பனைமரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும்.
விரைவில் குறிப்பிட்ட அளவு பொம்மைகள் செய்து கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்துவ மத நண்பர்களுக்கு பரிசுப்பொருளாக வழங்கிடவும் திட்டமிட்டுள்ளேன்.
இந்ந பனைவிதை பொம்மையானது முளைத்து வந்துவிட்டாள் அதனை நீர்நிலைகளில் விதைக்கவோ அல்லது ஆற்றின் நீரில் தூக்கி எறிவதன் மூலமாக இந்த பனைவிதை கிறிஸ்மஸ் தாத்தா பொம்மையானது நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையோரம் முளைத்து பனை மரங்கள் உருவாகிட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. இந்த பனைவிதை கிறிஸ்மஸ் தாத்தா பொம்மை மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் பனைமரங்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திட முடியும். என கூறினார்.
இவரை வாழ்த்த :
பசுமை செயற்பாட்டாளர்
G.அசோக்குமார்
9171870007.
8838204662.