இந்திய தொழில்
முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து கெமிக்கல் இல்லாத சோப் மற்றும் பினாயில் தயாரிக்கும் இலவச பயிற்சி துவக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் தலைமையிலும், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, அங்குசாமி ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.
இ.டி.ஐஐ திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் :- இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியை முறையாக பயன்படுத்தி பெண்கள் அனைவரும் சாதனையாளர்களாக உருவாக வேண்டும். தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் வரை உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என பேசினார்.
சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி பேசுகையில் :- நீங்கள் அனைவரும் ஆர்வத்துடன் இப்பயிற்சியை கற்றுக்கொள்ள வேண்டும். சொந்தமாக சுயதொழில் தொடங்க விரும்பினால் வங்கியில் மானியத்துடன் கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என பேசினார்.
தமிழ்நாடு கிராம வங்கி நிதிசார் அலுவலர் முத்துகிருஷ்ணன் -: வங்கியின் செயல்பாடுகள், எளிய முறையில் கடன் வசதி பெறுவது குறித்தும் அதன் சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் குறித்தும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் திட்ட அலுவலர் மஞ்சுளா. ஆதரவற்றோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் இந்திரா பங்கேற்றனர்.பயிற்சியாளர் ஐஸ்வர்யா ஆகியோர் நன்றி கூறினர்.