மதுரை மாநகர காவல் துறையின் “போலீஸ் அக்கா” என்ற முன் மாதிரி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் கூடுதல் துணை ஆணையர் மற்றும் காவல் நிலையங் களில் பணி புரியும் 95 மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை நகரில் உள்ள 185 பள்ளிகள் மற்றும் 25 கல்லூரிகளுக்கு மகளிர் காவல் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மாணவியருடன் வாரம் ஒரு முறை கலந்துரையாடி அவர்கள் சொல்லும் உளவியல், பாலியல், போதைப் பொருட்கள், குடும்பம் மற்றும் சமூக ரீதியான பிரச்சனைகள் இருப்பின் அவற்றை கண்டறிந்து எவ்வாறு தீர்வு காண வேண்டும் என ஆலோசனை கள் வழங்கினார்.
மேலும் மாணவியர் பகிரும் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காவல் ஆணையர் லோகநாதன் அறிவுறுத்தினார்.