நவம்பர் 17′ உலக சர்க்கரை தினத்தை முன்னிட்டு, மதுரை காமராஜர் சாலையில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் சர்க்கரை நோயாளிகளுக்கான மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கிம் மற்றும் டாக்டர் நரேஷ், டாக்டர் சிவதர்ஷன், டாக்டர் விக்னேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.
இதில் செவிலியர்கள் கோமதி, வேணி, லட்சுமிகாந்தி, பாக்கியலட்சுமி, கார்த்திகைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.