திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளை குறித்து பேசினார்.
இந்நிகழ்வின் போது திண்டுக்கல் மாவட்ட தலைவி அழகு ராஜாராம், மாவட்ட ஒன்றிய தலைவர் குனபாலன், மாவட்ட ஒன்றிய பொறுளாளர் யோகராஜா, மற்றும் தேனி மாவட்ட மகளிரணித் தலைவி சுப்புத்தாய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.