மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள எல்லீஸ் டேபிள் டென்னிஸ் பயிற்சி மையம் மற்றும் மதுரை ரோட்டரி கிளப் மீனாட்சி, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலேயான டேபிள் டென்னிஸ் லீக் போட்டி நடைபெற்றது .
தலைமை பயிற்சியாளர் சுந்தர் மற்றும் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினார்.
இப்போட்டி 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் மற்றும் 4-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒற்றையர் பிரிவு லீக் போட்டி மற்றும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது. முதல் நான்கு இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும்,கோப்பையும் வழங்கப்பட்டது.
இப்போட்டியை பத்மாவதி மருத்துவமனை தலைமை மருத்துவர் குரு சந்தர், மதுரை ரோட்டரி கிளப் மீனாட்சி செயலாளர் தாஸ், வாகை ரோட்டரி கிளப் செயலாளர் பாஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் பாண்டிச்சேரி, காரைக்குடி, ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.