தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் மழைநீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை…
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து கீழ்வேளூர், திருக்குவளை, கீழையூர்,தலைஞாயிறு ,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்ட அருந்தவம்புலம் பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் சுமார் 40 ஏக்கருக்கு மேல் மழைநீரில் மூழ்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சித்தார்த்தன்,ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா,விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தனபால் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கலந்தகொண்டனர்.