திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இனிப்புகள் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கியும் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.
இந்நிலையில் மதுரையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ ஆலோசனைப்படி, குரு தியேட்டர் எதிர்புறம் பெத்தானியாபுரம் பகுதி திமுக கழக செயலாளர் மதி வெங்கடேஷ் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம் முன்னிலையிலும், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் 1000-க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், வேட்டி, சேலைகள்,மாபெரும் அன்னதானம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
இதில் வட்டக்கழக செயலாளர்கள் இ.எஸ்.பாலமுருகன், நாகஜோதி சிவா, எம்.ஆர் தனசேகர், தேவராஜ்,அமுதா உள்பட மற்றும் மாவட்ட, பகுதி, வட்டக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை பெற்று சென்றனர்