ஏ என் டி கல்வி மருத்துவம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை டி ராஜகோபாலன்பட்டி தெற்கு தெரு நாயுடு சமூக நலச் சங்கம் சார்பாக மதுரை காளிமுத்து நகர் ராணி மங்கம்மாள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கண் காது மூக்கு தொண்டை பரிசோதனை, இருதய நோய், எக்கொ, இ.சி.ஜி மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.