மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது. இன்றைய சமூகத்தில் மக்கள் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இவ்வுலகில் மனித இனம் தியானத்தை கடைபிடித்தால் உடலும் உள்ளமும் நன்றாக செயல்படும் என்பதை மனதில் கொண்டு இவ்வாண்டு முதல் உலக தியான தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 21 தேதியன்று “வேர்ல்டு மெடிடேஷன் டே ” என்ற பெயரில் இவ் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியானது சீர்காழி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் சீர்காழி ரோட்டரி கிளப் ஆஃப் சீர்காழி டெம்பிள் டவுன், மற்றும் ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை ஏற்க மனவளக்கலை மன்ற பேராசிரியர் ஏ. செல்லம்மாள் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கங்களின் மண்டல துணை ஆளுநர் வி.சி. பாலாஜி, மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் கே. எஸ். கோபால கிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆஃப் டெம்பிள் டவுன் செயலர் ஆர்.சி.வினோத், இணை செயலர் பி. கார்த்திக், மனவள மனவள கலை மன்றத்தின் பொருளாளரும் துணை பேராசிரியருமான செந்தில், ஆசிரியர் முத்துலட்சுமி மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பி. மார்கண்டன், எஸ். சக்திவேல், ஆர்.கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.