“விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்க டெல்லியில் மாத கணக்கில் தங்கி போராட்டம் நடத்துவது போல, தமிழக விவசாயிகள் சென்னையில் முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்”*
“விவசாய நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றத் துடிக்கும் எ.வ.வேலு அமைச்சர் கிடையாது; அவர் ஒரு வியாபாரி”
“மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் முதலமைச்சர், NLC விரிவாக்கத்திற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை?”
அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு
பாமகவின் துணை அமைப்பான “தமிழ்நாடு உழவர் பேரியக்கம்” சார்பில் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது. உழவர் மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
யாருக்கும் நிரூபிப்பதற்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை மாறாக உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் உழவுகளை பற்றிய அக்கறை கிடையாது. அதிலும் குறிப்பாக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி முதலாளிகளுக்கான ஆட்சியாக உள்ளது.
வெறும் 25 நாட்களில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட மாநாட்டை நடத்துகிற சக்தி பாமகவிற்கு மட்டும்தான் உள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்று சொன்னால் சுற்றிலும் இருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கி போராட்டத்தை தீவிரமாக நடத்துவார்கள் அது போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சென்னையை நோக்கி சென்று அங்கு தங்கி நாம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துங்கள் அதுதான் என்னுடைய ஆசை…
மருத்துவர் ராமதாஸ் என்றைக்கு உத்தரவிடுகிறாரோ அன்றைக்கு டிராக்டர்கள் மாட்டு வண்டிகள் மூலமாக கிராமங்களில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி சென்று நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்டவ் எடுத்துக்கொண்டு சென்று அங்கேயே தங்கி நாம் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
டெல்லியில் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு போராட்டங்களை நடத்துவதால் விவசாயிகளின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் நம் தலையெழுத்து விவசாயிகள் சிதறி கிடக்கிறார்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் திமுக ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது உழவு என்றால் தெரியாது. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் மூன்று துறைகள் இருக்கிறது; வேளாண்துறை, உற்பத்தி துறை, சேவை துறை இந்த மூன்று முக்கிய துறைகள் தான் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியை(GSDP) முடிவு செய்கின்றன.
இதில் வேளாண் துறையில் 63 சதவீத மக்கள் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களின் 63 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
ஆனால் தமிழக அரசாங்கம் விவசாயிகளுக்கு எதுவுமே செய்வதில்லை. தற்போது உள்ள அரசாங்கம் என்ன நினைக்கிறது என்றால் பெண்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டால் அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
பெரு முதலாளிகள் பத்தாயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பித்து வெளிநாட்டில் சொகுசை அனுபவித்து வருகிறார்கள் ஆனால் நம்முடைய ஏழை விவசாயி வங்கியில் வரும் பத்தாயிரம் கடன் வாங்கி விட்டால் வங்கி அதிகாரிகள் 10 முறை வீட்டுக்கு வசூலுக்கு வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு சுயமரியாதை அதிகம் இருப்பதனால்
தாங்கள் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாவிட்டால் தூக்கிட்டு செத்துப் போகிற கூடிய மோசமான நிலையில் உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது சிந்தித்துப் பாருங்கள் நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம்.
இன்று இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இவற்றை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்.
ஐந்து திணைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இப்படி கிடையாது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க மருத்துவர் அய்யாவும் நாங்களும் இருக்கிறோம். உழவர்களே ஒன்று சேருங்கள். வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்…
தமிழக விவசாயிகளுக்கு இலவசமோ பிச்சையோ வேண்டாம் எங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்தால் போதும் நியாயமான விலையை கொடு என அரசாங்கத்தை நோக்கி அன்புமணி ஆவேசமாக பேசினார்.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி படி ஒரு ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்ய 46 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அதில் 22 குவிண்டால் அதாவது 55 மூட்டை நெல் கிடைக்கிறது.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு அரசு நிர்ணயத்தில் உள்ள விலை 2035 ரூபாய்… ஆனால் ஒரு குவின்டால் நெல்லை உற்பத்தி செய்ய விவசாயிகள் 2,200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது .
விவசாயிகள் இப்படி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் இதனால் தான் மத்திய, மாநில அரசுகளை நோக்கி கேட்கிறோம். ஒரு குவின்டாலுக்கு ரூ.3,500 கிடைப்பதற்கு வழிவகை செய்யுங்கள் என்று கேட்கிறோம்.
இதே போல தமிழக வேளாண் பல்கலைக்கழக கணக்கெடுப்புபடி
ஒரு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்ய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.அதில் ஒரு ஏக்கரில் 40 டன் கரும்பு வரும்.
இதில் குறைந்தபட்ச ஆதார விலையாக 3,100 ரூபாய் அரசாங்கம் கொடுக்கிறது. ஆனால் செலவு 300 ரூபாய் ஆகிறது 200 ரூபாய் விவசாயிகளுக்கு எதிலும் நஷ்டம்தான் ஏற்படுகிறது.
இதனால்தான் நாங்கள் மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்துகிறோம் ஒரு டன் கரும்புக்கு 5000 ரூபாய் கொடுங்கள் என்று கேட்கிறோம்.
கடைசி 10 ஆண்டுகளில் உரங்களின் விலை அதிககமாக ஏறிவிட்டது. இது தவிர விவசாயிகள் வறட்சியாலும் வெள்ளத்தாளும் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை,தென் மாவட்டங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த தமிழக அரசு விழுப்புரம்,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ள பாதித்தால் பாதிக்கப்பட்டது போது வெறும் 2000 தான் கொடுக்கிறார்கள் இங்கு உள்ள மக்கள் என்ன பாவம் செய்தவர்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் .
திமுக அரசாங்கம் செய்த தவறால்தான் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது அவர்கள் உரிய நேரத்தில் உபரி நீரை வெளியேற்றி இருந்தால் இந்த வெள்ளமே ஏற்பட்டிருக்காது என புள்ளி விவரங்களோடு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு விவசாய போராட்டங்களுக்காக பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தி அதில் பலவற்றில் வெற்றி பெற்றுள்ளது.
பரந்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் விமான நிலையத்தில் கொண்டு வரக்கூடாது அதற்கு பதிலாக திருப்போரூர் அருகில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் பகுதியில் விமான நிலையத்தை கொண்டு வரலாம்.
சென்னையில் இருந்து 80km, 90 km தொலைவில் உள்ள பரந்தூரில் நீங்கள் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வந்தால் அது வெற்றி பெறாது.
சுற்றுச்சூழல் சீர்கேடாக வேலூரில் செயல்பட்டு வந்த தோல் பதன தொழிற்சாலையை மூடியது பாமக ; அதேபோல வேலூரில் பாலாற்றையும் தென்பெண்ணையாற்றையும் இணைக்க வேண்டும் என பாமக எத்தனையோ பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த மாவட்டத்தில்தான் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார் அவரிடம் கேட்டால் “யும்…” என இரண்டு கைகளை விரித்து காண்பிக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மேல்மா என்ற பகுதியில் சிப்காட் கொண்டு வரவும் 3500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டார்கள் அதனை தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி.
ஆங்கிலேயர் ஆட்சியில் கூட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடவில்லை ஆனால் தற்போது நடைபெறுகிற கொடுங்கோல் ஆட்சியில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்ற கொடுங்கோள் ஆட்சியாக திமுக ஆட்சிய இருக்கிறது.
கொலை கொள்ளை கஞ்சா விறப்பவன் கள்ளச்சாராயம் விற்பவன் இவர்களைத்தான் குண்டர் சட்டத்தில் போடுவார்கள் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைகிறார்கள் என்றால் திமுக ஆட்சி எப்படி உள்ளது என சிந்தித்துப் பாருங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் அவர் அமைச்சரு கிடையாது வியாபாரி ; திமுகவில் முதலமைச்சரை சுற்றி இதுபோல ஒரு 4,5 வியாபாரிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள் தொழிற்சாலையை என்ன ஆகாயத்தில் கட்ட முடியும் என ஒரு தமிழக அமைச்சர் கேட்கிறார். நான் கேட்கிறேன் விவசாய நிலங்களை எல்லாம் அழித்துவிட்டு நாளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?சீனா, ஜப்பான், தாய்லாந்திடமும் சென்று சோற்றுக்கு பிச்சை எடுக்கப்போறீர்களா? என ஆவேசமாக அன்புமணி பேசினார்
தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தை கையகப்படுத்தினாலும் அங்கே பாமகவும் அன்புமணி சென்று போராட்டம் நடத்துவோம்.
ஏற்கனவே 50000 ஏக்கர் விளைநிலங்களை அடித்த என்எல்சி மேற்கொண்டு 50 ஆயிரம் விலை நிலங்களை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முழு ஆதரவு கொடுக்கிறது திமுக அரசு. ஆனால் இதே முதலமைச்சர் பேசுகிறார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர விடமாட்டோம் என பேசுகிறார். முதலமைச்சருக்கு டங்ஸ்டன் சுரங்கத்திற்கு வந்த ஆவேசம் ஏன் நெய்வேலி விவசாய நிலங்களுக்காக வரவில்லை ..?
கடலூர் மக்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? முதலமைச்சர் ஏன் இவ்வாறு பாகுபாடு செய்கிறார்.
டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கம் மட்டும் வேண்டுமா ?
வட தமிழ்நாட்டு மக்கள் எப்படியும் நமக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என மிதப்பில் இருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் இது அவர்களுக்கு தெரியும். வட தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ன முதலில் குரல் கொடுத்தது மருத்துவர் ராமதாஸ்… 2015 முதல் நாங்கள் பேச ஆரம்பித்தோம் 2020இல் அது சட்டமாக மாறியது. செய்தது அதிமுகவாக இருக்கலாம் ஆனால் குரல் கொடுத்தது செய்ய வைத்தது பாமக.
தமிழகம் முழுவதும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி விவசாயிகளிடம் வேளாண் விளைபொருட்களை பெற்று குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.
நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள் சம்பந்தமாக 18 முக்கிய கேள்விகளை கேட்டுள்ளேன்.