தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரியான சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம்- வேளாண்மையில் பெண்கள் என்ற திட்டத்தின் சார்பில் தேனி மாவட்டம் பெண் விவசாயிகள் மற்றும் சிறுதொழில் தொடங்குபவர்களுக்கு ஐந்துநாள் 10.12.2024 முதல் 14.12.2024 வரைதிறன் மேம்பாட்டுபயிற்சியானது”அடுமனைப் பொருட்கள் தொழில் நுட்பக் கலை- பாரம்பரியத்திலிருந்து புதுமைவரை “என்ற தலைப்பில் 10.12.2024ம் தேதி சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தொழில் முனைவோர் சந்திப்பு மற்றும் ஐந்து நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியின் தாக்கமாக அடுமனைப் உணவுப்பொருட்கள் தயாரித்து வெளியீடுதல் போன்ற நிகழ்வுகள் 20.12.2024 அன்று சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், தேனீமாவட்டத்தில் நடைபெற்றது
.
இதில் மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், முதல்வர், முனைவர். ச.காஞ்சனா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிஜிட்டல் சாகப்தத்தில் பெண் தொழில் முனைவோருக்காக வாய்ப்புகள் மற்றும் பெண்கள் தொழில் முனைவில் உள்ள தடைகளை உடைத்து சாவல்களை சாமளிக்கும் விதம் குறித்து பேசினார்.
இந்நிகழ்வை தொடந்து அடுமனைப் உணவுப்பொருட்கள் தொழில் தொடங்க ஐந்து நாள் திறன் மேம்பாட்டுபயிற்சி பயிற்சி எடுத்த ஆர்வமுள்ள பெண்கள் தங்களது தயாரிப்பு உணவுப்பொருட்களான சிறுதானிய பிஸ்கட், மாப்பிள்ளை சம்பா பிஸ்கட், பிராவுனி, பிளம் கேக், வாழைப்பழ கேக், புட்டிங் கேக், முட்டையில்லாத கேக், பன், பாஃகர் மற்றும் பிற தயாரிப்புகளை தயாரிப்பு முத்திரையிட்டு முனைவர். ச.காஞ்சனா, முதல்வர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், தேனி மாவட்ட துணை இயக்குநர் டாகடர்.பி.சிவராமன், எம். ரத்தினவேல் பாண்டியன், பொது மேளாளர், மாவட்ட தொழில் மையம், தேனி எஸ். சங்கர் கணேஷ், மாவட்ட தொழில் மையம், தேனி, முனைவர் ஆரோக்கியமேரி, இணை பேராசிரியர் மற்றும் முனைவர்.லெ. செந்தாமரைச்செல்வி முதுநிலை ஆராய்ச்சியாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
திருமதி. எம். ரம்யாசிவசெல்வி எஸ்.எம். எஸ் சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், தேனி மாவட்டம் இந்நிகழ்விற்கான நன்றியுரையினை வழங்கினார். இதில் 100க்கும் மேற்ப்பட்ட ஆண் மற்றும் பெண் தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் தொடங்குபவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.