ஜல்லி,எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வு ஒப்பந்ததாரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் பள்ளி கட்டிட பணிகள், மருத்துவமனை கட்டுமான பணிகள், சாலை பணிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத் தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன், பொருளாளர் வி.கணேசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மதுரை மாநகராட்சி பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் பி.ராஜூ, செயலாளர் க.முருகானந்தம், பொருளாளர் என்.எஸ். செல்லப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்களை சந்தித்து, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜல்லி,எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர்.