அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பு; மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள், தேர்தல் நியாயமாக நடைபெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறகணிக்க அதிமுக மாவட்ட செயலார்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.