விழுதுகள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இவர்களுடன் இணைந்து ச.மு.இ கல்விக்கூடங்கள் நடத்திய சீர்காழி ச.மு.இ கல்விக்கூடங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் சீர்காழி ச.மு.இ தோப்பு பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. சீர்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி தலைமை ஏற்று, வரவேற்புரையாற்றினார். விழுதுகள் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் ஏ. கே ஷரவணன் முன்னிலை வகித்து கண்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்வில் ச.மு.இ கல்விக்கூடங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வேலுமணி, முகாம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் , இருபதுக்கும் மேற்பட்ட கண் பரிசோதனை செவிலியர்கள்,உதவி தலைமை ஆசிரியர் துளசி ரங்கன் ,காசி.இளங்கோவன், ரமேஷ் , சீனுவாசன், கிங்ஸ் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜான் விக்டர் மற்றும் விழுதுகள் இயக்கத்தினர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளீதரன் நன்றி கூறினார்.