மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பச்சரிசி ஐந்து கிலோ, அச்சு வெல்லம், துவரம் பருப்பு, மங்கள பொருட்கள் அடங்கிய துணி பையுடன் கூடிய தொகுப்பு பரிசினை தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மற்றும் டீன் டாக்டர். எஸ். சுவாமிநாதன் தனது கரங்களால் கிராம மக்களிடம் நேரில் சென்று வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.பரிசு பொருட்களை பெற்றுக் கொண்ட கிராம மக்கள் சாஸ்திர பல்கலைக்கழகத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் சேமங்கலம் ஊராட்சியில் மின்விளக்கு ஏற்படுத்த முடியாத ஆற்றங்கரை ஓரம், மின்விளக்கு இல்லாத சுடுகாடுகளில் 40-க்கும் மேற்பட்ட சோலார் மின்விளக்கு ரூபாய் – (18,லட்சம்) மதிப்பில் பொருத்தியுள்ளனர்.
சாஸ்திரா பல்கலைக்கழக இயக்குனரிடம் எருமல் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆய்வு செய்து நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார்.
கிராம மக்கள் சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேனர்கள் அமைத்தும் பல்கலைக்கழகத்தின் இயக்குனருக்கு சால்வை அணிவித்தும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.