கல்வித்தந்தை பி.கே மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பி.கே மூக்கையா தேவர் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் (பசும்பொன்) கட்சி நிறுவனர் எம்.மகேஸ்வரன் நினைவாக ஏழை எளியவர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பி.கே.மூக்கையாத்தேவர் நற்பணி மன்ற தலைவர் தினகரன், பொருளாளர் கௌதம் மற்றும் ஜெ.கார்த்திகேயன் எஸ்.எஸ் காலனி பாலாஜி, சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.