செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில்
ஒரே நாளில் ரூ.10 லட்சத்திற்கு நெல் கொள்முதல்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை அறுவடை பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை கடந்த 1 மாதத்திற்கு மேலாக விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று நாகை விற்பனை குழு செயலாளர் கோ. வித்யா நேரடியாக விவசாயிகளின் இருபிடத்திற்கே சென்று விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் கண்காணிப்பாளர் சங்கர் ராஜா தலைமையில் பொறுப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு, மேற்பார்வையில் செம்பனார்கோயில் அருகே மாத்தூர் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் நெல் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.
இதில் சுமார் 400 குவிண்டால் கோ – 51 ரக நெல் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,050-க்கும் சராசரியாக ரூ.2,100-க் விலைபோனது. நேற்று ஒரே நாளில் மட்டும் 470 குவின்டால் நெல் சுமார் ரூ.12 லட்சத்திற்கு கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதேபோல் தேடிவந்து விவசாய விளைபொருட்கள் கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து ரன்னர்செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுவதாலும், மேலும் மின்னணு தேசிய வேளாண்ர் அல்லதிட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் விற்பனைகுழு செயலாளர் கூறுகையில் விவசாயிகளின் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க தமிழக அரசு பல திட்டங்களையும், பல சலுகைகளும் செய்துவரும் நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், எள், கம்பு, மக்காசோளம், பச்சபயறு, உளுந்து, தேங்காய், மிளகாய், போன்ற விளைபொருட்களை விற்பனை கூடங்களின் மூலம் விற்று இடை தரகர் இல்லாமல் நல்ல விலை பெற்று பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.