நாகை அருகே தேவூரில் இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கீழ்வேளூர் வட்டாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை , தேவூர் இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக புகையிலை விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பள்ளி தாளாளர் ஜான் பீட்டர் தலைமையில் நடைப்பெற்ற பேரணியில் பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், போதை பெருள்களால் ஏற்படும் தீமைகளை முழக்கமிட்டப்படியும் ஊர்வலமாக சென்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி பெரிய கோவில் வீதி, மருத்துவமனை வீதி, சின்ன கடைத்தெரு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முன்னதாக பள்ளி வளாகத்தில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கலந்துக்கொண்டனர்
இப்பேரணியில் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் ஜி.வினோத் குமார், பி. அரவிந்தசாமி,
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் ஆர். பிரதாப், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் வி. மதுமிதா, கீழ்வேளூர் காவல் உதவி ஆய்வாளர் ரவி, காவல் துறை அருண் பிரசாத், பள்ளியின் முதல்வர் எஸ்.நம்பிக்கைமேரி, துணை முதல்வர் அருள் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.