50 ஆம் ஆண்டு அண்ணா தொழிற்சங்கம் துவக்க விழா மயிலாடுதுறையில் உற்சாக கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் கழக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
அதிமுகவின் தொழிற்சங்க பிரிவான அண்ணா தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி சித்தர் காடு நவீன அரிசி ஆலை முன்பு நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்கம் மாநில செயலாளர் கே சிவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் பங்கேற்று கழகக் கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அண்ணா தொழிற்சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலையில் மூத்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை நகர செயலாளர் செந்தமிழன் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் கோமல் அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளான தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.