மதுரை அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில், ரவீந்திரநாத் தாகூரின் “கீதாஞ்சலி கவிதைகள்” நூலை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா வெளியிட, கல்லூரியின் தலைவர் என்.எம்.ஆர்.கே ஜவஹர் பாபு பெற்றுக் கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.எஸ்.கோமதி வரவேற்று பேசினார். மதுரை கல்லூரியின் மேனாள் ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி, சௌராஷ்டிரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் டி.ஆர் மோகன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் டி.வி.எஸ் மணியன் ஏற்புரை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் தாளாளர் எம்.வி.ஜனரஞ்சனி பாய் நன்றியுரை கூறினார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.