நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வீபிஆர்பி கிராம செழுமை விரிவாக்க திட்டம் பயிற்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் , ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
இதில் அறிவுநிதி வட்டார இயக்க மேலாளர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்டம் இயக்குநர் / இணை இயக்குநர் முருகேசன் குத்து விளக்கேற்றி பயிற்சி துவங்கி வைத்தார்.
மகளிர் உதவி திட்ட அலுவலர் இந்திராணி முன்னிலையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது
இந்த பயிற்சியில் உரிமைச் சார்ந்த திட்டம் எம்.ஜி.என்.ஆர்.ஈ.ஜி.ஏஅட்டை தேசிய சமூக உதவி திட்டம் தனிநபர் கழிப்பிடம் காப்பீடு குடும்ப அட்டை சுகாதார அட்டை சமையல் எரிவாயு திட்டம் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்
வாழ்வாதார திட்டம் பண்ணைத் தொழில்கள் பண்ணை சாரா தொழில்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பு நுண் நிறுவனங்கள்
பொது சொத்துக்கள் சேவை திட்டம் சாலை வசதி குடிநீர் வசதி தெருவிளக்கு அமைத்தல் பள்ளி கட்டிடம் நூலக வசதி ஏரி குளம் பராமரிப்பு வசதி
சமூகம் மேம்பாட்டு திட்டம் இளம் வயது திருமணம் தடுத்தல் பெண் குழந்தை பாதுகாப்பு குடும்ப வன்முறை தடுத்தல் பள்ளி இடைநிறுத்தம் பெண் குழந்தைகள் படிக்க வைத்தல் திருமண வரதட்சனை தடுப்பு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பற்றியும் கிராம ஊராட்சி நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றியும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்துஜா நன்றி கூறினார்.