திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால முதல்நிலை பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது…
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாரத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முன்னெச்சரிச்சை நடவடிக்கை தொடர்பாக வலிவலம் சரகத்திற்குட்ட 9 கிராமங்களுக்கு பேரிடர் கால முதல்நிலை பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் வட்டாட்சியர் சுதர்சன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பருவமழை காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியவைகள் குறித்து தீயணைப்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் எழிலரசி, தேர்தல் துணை வட்டாட்சியர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.